வாழ்வை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்வோம்

கெட்டவர்கள் என்று எவரும் இல்லை.. நம் எண்ணங்களை பொறுத்தே அமைகிறது.!

மற்றவர்களை கீழே தள்ளி விடுவதினால் நாம் வலிமை அடைவதில்லை.. அவர்களை தூக்கி விடும் போது தான் நாம் வலிமை அடைகின்றோம்.!

உழைப்புக்கு பின் இரவில் ஓய்வு.. ஓய்வுக்கு பின் பகலில் உழைப்பு இதுவே வாழ்க்கையை செழிமை ஆக்கும்.

சில சமயங்களில் முடிவுகளை விட முயற்சிகள் அழகானவை.!

பணத்தால் அனைத்தையும் வாங்க முடியும்.. ஆனால் ஒருபோதும் உங்களுடைய மரியாதை.. கௌரவம்.. நேர்மை.. இவற்றை எவ்வளவு விலை கொடுத்தாலும் வாங்க முடியாது.

படுத்தே இருந்தால் படுக்கையும் நமக்கு பகையாகும்.. எழுந்து முயற்சி செய்தால் உலகமே நமதானது ஆகும்.!

வாழ்க்கையில் ஒவ்வொன்றையும் நேசிக்க நேசிக்க வாழ்வை புதுப்பொலிவாய் புத்தம் புதிதாய் வாழ ஆரம்பிப்பாய்.!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *